கல்குவாரியில் பாறை சரிந்து பயங்கர விபத்து- ஒருவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை மண்சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே பாடாலூர் பகுதியில் செட்டிகுளம் கிராமத்தில் திருச்சி மாவட்டம் மேல்கல் காண்டார் கோட்டையை சேர்ந்த பரந்தாமன் என்பவருக்கு சொந்தமான *(ARN)* கல் குவாரி உள்ளது . இந்த குவாரியில் நேற்று தொழிலாளிகள் பாறைகளுக்கு வெடிவைக்கும் பணியில் ஈடுபட்டிந்த போது வெடிவைத்து தகர்த்து விட்டு தலவாட பொருட்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பாறை மண் சரிந்து விழுந்ததில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற கூலித் தொழிலாளி ஒருவர் மண் சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந் நிலையில் வெளிச்சம் இல்லாததால் இரவு நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட முடியாததால் பணி முடங்கியது. இந்நிலையில்இன்று காலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மண்சரிவில் சிக்கியவரின் உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தின் போது பரத் என்ற மற்றொரு தொழிலாளி படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்த இடத்தை வருவாய் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதிந மிருணாளினி மற்றும் மாவட்ட காவல் காணிப்பாளர் . திருமதி G.S அனிதா ஆகியோர் நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பெரிய அளவிலான பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் இன்று காலை மீட்பு பணி தொடங்கி 5 மணி நேரம் கடந்த பிறகும் உடலை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரிகளில் இது போன்ற மண்சரிவில் உயிரிழப்புகள் தொடர்வதால் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


