கள்ளக்காதலுடன் மனைவி ஓடியதால்... மகளை கொன்று தந்தையும் தற்கொலை

 
ட்

பூவிருந்தவல்லி அருகே மனைவி விட்டுச் சென்றதால் 5 வயது மகளை கொலை செய்து விட்டு கார்பெண்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்க்குப்பம் வாணியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(32).  கார்பென்ட்டாக வேலை செய்து வந்தார்.  இவரது மனைவி பரிமளா(28).  இந்த தம்பதியினருக்கு நட்சத்திரா(5) என்ற  மகள் உள்ளார். இன்று காலை வீட்டிலிருந்து மோகனும், அவரது குழந்தை வெளியே வராதால் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குழந்தை நட்சத்திரா வாயில் நுரை தள்ளியபடியும், மோகன் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் . போலீசாரின் விசாரணையில் மோகனின் மனைவி பரிமளா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் மகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மோகன் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்று அவரிடம் சண்டை போட்டு மகளை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். மனைவி வேறொருவருடன் ஓடிப்போனதால் ஏற்பட்ட மன உளைச்சலில் மோகன் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.