‘தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்’ - அன்புமணி தந்தையர் தின வாழ்த்து..

 
anbumani with ramdass anbumani with ramdass
 

 ‘தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்!’ என பாமக முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

உலகளவில் வெவேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தந்தையர் தினம், பொதுவாக ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்றைய தினம் ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்ப உறவுகளில் அசைக்க முடியாத ஆணிவேர் போன்றது தந்தையின் உறவு. ஒரு நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக, தலைவனாக என  தந்தையர்கள் வகிக்கும் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு நிலையான வலிமையுடன் குடும்பத்தை வழிநடத்துறது. அத்தகைய தந்தையருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த நாளில்,  தந்தையர்களின் தியாகங்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.             

anbumani
அதவகையில் பாமக முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது எக்ஸ் தள பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்!

தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்.
ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், 
அன்பாக வளர்ப்பது  தந்தையரின் திருப்பணி.
தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.  


ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு இருந்து வருகிறது. தாய், தந்தையரை அன்புமணி மதிக்க வேண்டும் என்றும், பெற்றோரை மகிச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றும்  அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்திருந்தார். இந்த நிலையில் அன்புமணி தந்தையர் தின வாழ்த்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.