வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிறுத்தை உயிரிழப்பு!!

 
ttn ttn

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவின் இயக்குனர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.  

zoo

பூங்காவில் 70க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் விலங்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் விலங்குகளுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உண்டு என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது.இந்நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜெயா என பெயரிடப்பட்ட பெண் சிறுத்தை கொரோனா  பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டு இருந்தபோது உயிரிழந்துள்ளது. ஏற்கனவே விஷ்ணு என்ற சிங்கம் உயிரிழந்த நிலையில்  தற்போது சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. கடந்த வாரம் இதே பூங்காவில் இருந்த விஷ்ணு என்ற ஆண் சிங்கம் உயிரிழந்த நிலையில், தற்போது சிறுத்தை ஒன்று பலியாகியுள்ளது.

zoo

முன்னதாக பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஒவ்வொரு விலங்குகளையும் உரிய இடைவெளிகளில் வைத்து பராமரிப்பது,  பணியாளர்களுக்கு கவச உடைகளை வழங்குவது, விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவுகளை பரிசோதித்து கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர்கள் 76 பேருக்கு கொரோனா தொற்று காரணமாக 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.