உருவாகிறது ஃபெங்கல் புயல்? - சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு என தகவல்

 
cyclone cyclone

வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளள்ளனர்.
 
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் இன்று உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறு எனவும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புயலாக வலுப்பெற்றால் ஃபெங்கல் என பெயரிடப்படும் எனவும், சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.