யுவன் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு

 
ச் ச்

யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில்,டிக்கெட் இன்றி அரங்கிற்குள் ஏறி குதித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் சிலர் அத்துமீறி அரங்கிற்குள் சுவரேறி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிக்கெட் இன்றி அரங்கிற்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்த இளைஞர்களை  பவுன்சர்கள் மற்றும் போலீசார் வெளியே அனுப்பனர். இதனால் நிகழ்ச்சியில் போலீசார், ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


இறுதியாக நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா, கோவை மக்களுக்கும், பாதுகாப்பு வழங்கிய போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார்