சர்தார்-2 படப்பிடிப்பின்போது தவறி விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி
Jul 17, 2024, 12:30 IST1721199657000
‘சர்தார்-2’ படப்பிடிப்பின்போது தவறி விழுந்து சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்தார்.

சென்னையில் சாலிகிராமத்தில் நடிகர் கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பில் 20 அடி உயரத்தில் இருந்து சண்டை பயிற்சியாளர் ஏழுமலை தவறி கீழே விழுந்தார். உடனே அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலே இருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சண்டை பயிற்சியாளர் ஏழுமலை படப்பிடிப்பின்போது, எவ்வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


