"மக்களை சூறையாடிய புலியை சுட்டு கொல்ல கூடாது" - டெல்லியிலிருந்து தொடுக்கப்பட்ட வழக்கு!

 
ஆட்கொல்லி புலி

கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரை, புலி ஒன்று கொடூரமாக தாக்கிக் கொன்றது. இதையடுத்து அப்புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நேற்று மசினகுடிக்குச் சென்று கல்குவாரி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த குறும்பர் பாடியை சேர்ந்த பசுவன் என்ற முதியவரை கொன்றது. 

மசினகுடியில் உலாவும் ஆட்கொல்லி புலி.. சுட்டுக்கொல்ல உத்தரவு - தேடுதல்  வேட்டையில் இரண்டு மாநில வனத்துறை

தொடர்ந்து மனிதர்களை புலி கொல்வதால் அதனை சுட்டுக் கொல்ல வலியுறுத்தி, மசினகுடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் அழுத்தத்தின் பேரில் புலியை சுட்டுக் கொல்ல தலைமை வன உயிரின காப்பாளர் சேகர்குமார் உத்தரவிட்டார்.  இதையடுத்து அப்புலியை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேசமயம் புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதை எதிர்த்து உத்தரபிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஆட்கொல்லி புலி இன்று சிக்குமா? மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை | killer  tiger hunting

அந்த மனுவில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.