மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்- இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

 
“திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை” சத்யபிரதா சாகு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை வெளியிடுகிறார்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த திருத்த பணியின் தொடக்கமாக, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிடப்பட்டது. இந்த  வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில்  மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இதில் 3 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 10 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள்.  மூன்றாம் பாலினத்தவர் 8,016 பேர். 

இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி தொடங்கியது. இதற்காக  தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 4 நாட்கள்  சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 9 லட்சத்து 13 ஆயிரத்து 535 பேர் விண்ணப்பம் அளித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் நாளை  வெளியிடப்படுகிறது. 

மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள், 17 வயதிற்கு மேல் இருப்பவர்கள்  விண்ணப்பிக்கலாம்: சத்யபிரதா சாகு

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு  தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இறுதி வாக்காளர் பட்டியலை நாளை வெளியிடுகிறார். மாவட்டங்களில்,   மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட வாரியாக  வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர். சென்னையில் மாநகராட்சி ஆணையர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவதால அவர் வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே  மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு பிறகு  தேர்தல் பணிகளில் ஆணையம் தீவிரமாக ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.