"சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையில், நிதி நுட்ப நகரம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

உலகத் தரம் வாய்ந்த அதிநவீன வங்கி,காப்பீடு உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படுகிறது.

cm stalin

ரூ.254 கோடியில் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அடிக்கல் நாட்டிய நிலையில் 56 ஏக்கரில் அமையும் நிதி நுட்ப நகரத்தில் வணிக குடியிருப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இடம் பெறுகின்றன. சுமார் 80 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்க உ ள்ளது . அத்துடன் 12 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதி நுட்ப நகரம் அமைகிறது.

MK Stalin

இதையடுத்து நிதி நுட்பம் நகரம் மற்றும் நிதி நுட்ப கோபுரம் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரையாற்றினார. அப்போது பேசிய அவர், "நிதி நுட்ப தொழில் சூழல் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது; ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எல்லா சேவைகளும் சென்று சேர வேண்டும்; கைபேசி மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரிப்பு; டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது; சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையில், நிதி நுட்ப நகரம் அமைக்கப்படும். 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ₹1000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப கோபுரமும் அமைக்கப்படுகிறது அமைகிறது" என்றார்.