"பிராமணர்களும் மாமிசம் சாப்பிட்டார்கள்" - வைரலாகும் ஆன்மீக பேச்சாளரின் வீடியோ

 
tn

நடிகை நயன்தாரா சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் அன்னபூரணி அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கிய நிலையில்  சமீபத்தில் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது இந்த சூழலில் மும்பை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி இந்த படத்தில் வரும் சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

tn

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும்,  அர்ச்சகர் மகளான கதாநாயகி நமாஸ்  செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இது மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதுடன்,  வேண்டுமென்றே இந்த காட்சிகளை எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது என்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.



இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் பாண்டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆன்மீக பேச்சாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதில் இதிகாச புராண காலகட்டத்தில் பிராமணர்களும் மாமிசம் சாப்பிட்டார்கள்.வசிஷ்டர் முயல்கறி சாப்பிட்டுள்ளார். பிறகு அது குறைந்து விட்டது.  வேதம் கற்றுக்கொடுப்பவர்கள், வேதம் கற்றுக்கொள்பவர்கள் உடல் லேசாக இருக்க வேண்டும். சீரான செரிமானம் ஆகிய கூடிய எளிதான உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் இனிமேல் வரும் பிராமணர்கள் இனி மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று வடக்கிலிருந்து தெற்கு வரும் அகஸ்தியர் கூறியதாக புராணத்தில் உள்ளது. இதற்கு பிறகு பிராமணர்கள் மாமிசம் சாப்பிடவில்லை. இது சங்கரர், ராமானுஜர் காலத்தில் இன்னும் அதிகமாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார். இதை சமூகவலைத்தள வாசிகள் தற்போது ட்ரெண்டாக்கி வருகின்றனர்.