கைத்தறி துணிக்கடையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து

 
fire

சென்னை அருகே கௌரிவாக்கம் பாரம்பரிய கைத்தறி துணி கடையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகின. 

சென்னைவேளச்சேரி அடுத்த கௌரிவாக்கம் பஞ்சாப் ஹெண்ட்லூம் கடையில், பெட் சீட், தலகானி கவர்கள், சமையலறையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மேட்கள், பாய்கள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், பீரோக்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை மொத்த சில்லறை விற்பனையில் பஞ்சாபில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கம்போல நேற்று மாலை கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் திடீர் என்று கடையின் இடது புறத்தில் இருந்து புகை வந்ததை கண்டறிந்து உடனே கடையில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றினர்.

fire

காற்றின் வேகம் அதிகம் வீசியதில் தீ மற்ற பகுதிகளிலும் பரவ தொடங்கியது. தொடர்ந்து கடையின் தரை தளம் மற்றும் முதல் தளம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தாம்பரம், தாம்பரம் பயிற்சி பள்ளி, மேடவாக்கம், உள்ளிட்ட மூன்று பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரூந்த போதிலும் கடை முழுவதும் தீப்பற்றி பொருட்கள் தீயில் கருகி நாசமானது. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமனதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில்,  இந்த தீ-விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.