தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ. 15.34 கோடி செலவிலான கட்டடங்கள் திறப்பு!!

 
tn

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ. 15.34 கோடி செலவிலான கட்டடங்களை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

stalin

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது "காக்கும் பணி, எங்கள் பணி" என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். மேலும், பேரிடர் காலங்களில் மக்களை மீட்டெடுக்கும் பணிகளையும் இத்துறை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கிய பணிகளை ஆற்றி வரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணிகள் சிறக்க கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.28.43 கோடி செலவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 168 குடியிருப்புகள், ரூ.23.10 கோடி செலவில் 16 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள், ரூ.2.45 கோடி செலவில் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்கள், என மொத்தம் ரூ.53.98 கோடி செலவிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

stalin

அதன் தொடர்ச்சியாக இன்று, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் 2 கோடியே 51 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள்; கடலூரில் 4 கோடியே 43 இலடசம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடியில் 2 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள இரண்டு மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்; கரூர் மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்டம் அரவக்குறிச்சியில் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவிலும், இராணிப்பேட்டையில் கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் 2 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவிலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 94 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள நான்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள்; என மொத்தம் 15 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.