கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 4 பேர் பலி

 
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 4 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில்  4 பேர் உயிரிழந்துள்ளனர். 

கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் செல்லக்கூடிய சாலையில் பழையபேட்டை என்னும் இடத்தில், ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன்   இயங்கி வந்தது.  இந்த குடோனில் சுமார் 15 இருக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்தன. இந்த பயங்கர வெடி விபத்தில் அருகில் இருந்த 3 வீடுகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த 4 பேரில் ஒரு சிறுவர் மற்றும் ஒரு பெண் ஆகியோர் அடங்குவர். 

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 4 பேர் பலி

விபத்து குறிந்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். தரைமட்டமாகியுள்ள வீடுகளின் இடிபாடுகளில் 5 க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா எனவும் தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - குப்பம் நெடுஞ்சாலையில் கரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்து ஏற்பட்ட பகுதியில் கூடியுள்ளனர். மேலும், போச்சம்பள்ளி , ஓசூர்,  சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. தற்போது வரை தீ கட்டுக்குள் அடங்காமல் அருகில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மளமளவென  பரவி வருவதால் பாதற்றுமான சூழல் நிலவி வருகிறது.