‘நெருப்பாய்.. இருப்போமே வா வா.!!’ பாமக பரப்புரை பாடல் வெளியீடு..

 
anbumani ramadoss anbumani ramadoss


தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் நோக்கத்தை விளக்கும் பரப்புரைப் பாடலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். 

 இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூகநீதிக்கு  எதிரான, மக்களை வாட்டி வதைக்கக் கூடிய,  மக்களின் துயரங்களைத் துடைக்காமல் விளம்பர மோகத்தில் மகிழ்ச்சியடையும்  திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை,  3. வேலைக்கான உரிமை,  4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை ,

 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி  மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை  ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடனும்  இன்று  முதல் நான் மேற்கொள்ளவிருக்கும்  தமிழக மக்கள் உரிமைப் பயணத்தின் நோக்கங்களை விளக்குவதற்காக    ‘ உரிமைப் பயணம் ’  என்ற  தலைப்பில் பரப்புரை பாடல்   தயாரிக்கப்பட்டுள்ளது.  ” என்று குறிப்பிட்டு பாடலையும் பகிர்ந்துள்ளார்.  


 


 


 

null