ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை - எச்சரிக்கும் ரயில்வே நிர்வாகம்!!

 
ttn

ரயில் பயணத்தின்போது பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்கள் மூலமாக பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே போலீசார் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர் . வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் ரயில்களின் மூலமாக பட்டாசுகளை எடுத்து செல்ல நேரிடும்.

ttn

இந்நிலையில் கோவையில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க கோரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ttn

ரயில்கள் மற்றும் பேருந்துகளில்   எளிதில் தீப்பற்றும் பொருட்கள் ,பட்டாசுகள் ,டீசல் ,பெட்ரோல் விலையை ஏற்றி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயில்கள் மூலமாக பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மெட்டல் டிடக்டர் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ரயில் பயணத்தின் போது பட்டாசு எடுத்து சென்று பிடிப்படுவோருக்கு  3 ஆண்டு சிறை தண்டனையும்,  1000 ரூபாய் அபராதமும் விதிக்க நேரிடும் என பயணிகளுக்கு விழிப்புணர்வு காட்டுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை சட்டப்பிரிவு 164 இன் படி பட்டாசு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல முயன்றால் மேற்கூறிய தண்டனை வழங்கப்படும் என மத்திய ரயில்வே நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.