வாரத்தின் முதல் நாளே இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!!
வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும் , குறைவதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை, கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே நிதர்சனம். கடந்த ஆண்டுகளில் ஒரு சவரன் சுமார் ரூ.50,000 என்று விற்பனையான நிலையில் , நடப்பாண்டு ரூ.74ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த மாதம் இறுதியில் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்த ஆபரணத்தங்கம் விலை, இறுதி வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.2,500 குறைந்தது. ஆனால் ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஜூலை 1ம் தேதி சவரனுக்கு ரூ. 840 உயர்ந்தது; ஜூலை 3 அன்று சவரனுக்கு ரூ.360 ரூபாயும், ஜூலை 3ம் தேதி சவரனுக்கு ரூ.320ம் ஏற்றம் கண்டது. தொடர்ந்து 4 நாட்களுக்குப் பிறகு ஜூலை 4ம்தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.72,400க்கும் கிராம் ரூ.9,050க்கும் விற்பனையானது.
இந்நிலையில் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தங்கம் விலை சந்தித்திருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,080க்கு விற்கப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.9,010க்கு விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120க்கு விற்கப்படுகிறது.


