விழுப்புரம் அருகே ஓடும் விரைவு ரயிலில் ஐந்தரை சவரன் செயின் பறிப்பு- இளைஞர் கைது

 
ச் ச்

விக்கிரவாண்டியில் அதிகாலை ஓடும் விரைவு ரயிலில்  பெண்ணிடம் நகை பையை பறித்து ரயிலில் இருந்து குதித்த திருடனை சில நிமிடங்களில் போலீசார் கைது  செய்தனர்.

கொள்ளத்திலிருந்து தாம்பரம் சென்றுகொண்டிருந்த விரைவு ரயிலில் சங்கரன்கோவிலை சேர்ந்த லட்சுமி என்ற பெண் ரயிலில் சென்று கொண்டிருந்த பெண் கட்டப்பையில் பர்சில் வைத்திருந்த 5.1/2 ஐ பவுன் தாலி செயின் மற்றும் 13000  பணத்துடன் ரயில் வந்த திருடன் இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையம் வந்தபோது பர்சை அடித்துக்கொண்டு கீழே குதித்து விட்டான், பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100 க்கு போன் செய்ததால்  அருகில் இருந்த போலிசார் விரைந்து சென்று சில நிமிடங்களில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தவன் காயில் காயத்துடன் இருந்தவரை போலிசார். கைது செய்து விசாரணை செய்ததில்  ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த மோகித்(20)  தெரியவந்துள்ளது. அவனிடமிருந்து நகை, பணத்தையும் போலிசார் மீட்டு அவனை திண்டிவனம் ரயில்வே போலிசாரிடம் ஒப்படைத்தனர். காயம்பட்டவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். விரைவு ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் வேகம் குறைவாக சென்றதால் அதனை பயன்படுத்திக்கிண்டும் நகை பையை திருடிவிட்டு ரயிலில் இருந்து குதித்தது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.