'மும்பை போலீஸ் அதிகாரி' என்று பண மோசடி - 5 பேர் கைது!!

 
tn

ஆன்லைன் மோசடியில்  ஈடுபட்டதாக சென்னை சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் மும்பை காவல்துறை அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக  சென்னை மாநகர போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு லேப்டாப்,  இரண்டு கணினிகள் , இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

tn

 சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் 41 வயதான வேல்முருகனுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி மும்பை கிளையின் ஃபெடெக்ஸ் கூரியரில் இருந்து அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.  அவர்கள் வேல்முருகனிடம் உங்கள் பெயரில் மும்பையில் இருந்து தைவானுக்கு அனுப்பப்பட்ட பார்சலில் மடிக்கணினி ரூபாய் 35 ஆயிரம் அடங்கிய 500 ரூபாய் கட்டு போதைப்பொருள் உள்ளிட்டவை இருந்தது என்றும்,  இவை மும்பை காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

tn

இதையடுத்து அழைப்பானது மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டுள்ளது.  அப்போது பேசிய ஒருவர் , தன்னை மும்பை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு போதைப்பொருள் அடங்கிய பார்சலை அனுப்பியதற்காக வேல்முருகனை கைது செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளனர். அத்துடன்  வேல்முருகன் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ஒரு தொகையை மாற்றினால் விசாரணைக்காக விசாரணை நடைபெறாது என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது.  இதை நம்பி வேல்முருகன் ரூ. 49,324 குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் வங்கிக்கு சென்று பரிவர்த்தனை குறித்து விசாரித்த போது அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.  இது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்துள்ளார்.  புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

tn

சைபர் கிரைம் பிரிவினருடன் கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு தீவிர விசாரணை நடத்தியதில் சென்னையை சேர்ந்த முகமது அசாருதீன் (26 வயது) ராஜ்குமார்(56 வயது ) கணேஷ் ராஜ் (26 வயது ) எபினேசர் (24) ரத்தினகுமார் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி அலுவலகம் அமைத்து,  மும்பை போலீஸ் அதிகாரிகள் போல பேசி , பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரிய வந்தது . கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி  தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.