பிளிப்கார்ட் BB days vs Amazon : ஐபோன் விலை அதிரடி குறைவு ..! எந்த ஐபோன் எங்க வாங்கலாம்..?
IPHONE 16 PRO ரூ. 60,000க்கு கீழ் எப்படி வாங்குவது?
ஐபோன் 16 ப்ரோ 128ஜிபி மாடல், அதன் அசல் விலையான ரூ. 1,09,999ல் இருந்து ரூ. 85,999க்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி அல்லது எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் கூடுதலாக ரூ. 4,000 தள்ளுபடி பெறலாம். பிளிப்கார்ட் ஒரு எக்ஸ்சேஞ்ச் திட்டத்தையும் வழங்குகிறது. இதன் மூலம் பழைய சாதனங்களை மாற்றிக்கொண்டு ரூ. 43,850 வரை தள்ளுபடி பெறலாம்.
இந்த சலுகைகளை இணைக்கும்போது, ஐபோன் 16 ப்ரோவை ரூ. 60,000 அல்லது அதற்கும் குறைவாக வாங்க முடியும்.
ஐபோன்கள், என்ன ஆபர் விலைக்கு வாங்க கிடைக்கும் என்கிற ஒப்பீடு இதோ:
1. ஆப்பிள் ஐபோன் 13 (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.44,999 க்கும், அமேசான் இந்தியாவில் ரூ.43,900 க்கும் வாங்க கிடைக்கும்.
2. ஆப்பிள் ஐபோன் 14: பிளிப்கார்ட்டில் (128 ஜிபி) ரூ.52,990 க்கும் அமேசான் இந்தியாவில் (256 ஜிபி) ரூ.61,900 க்கும் வாங்க கிடைக்கும்.
3. ஆப்பிள் ஐபோன் 15 (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.64,900 க்கும், அமேசான் இந்தியாவில் ரூ.59,900 க்கும் வாங்க கிடைக்கும்.
4. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.69,999 க்கும், | அமேசான் இந்தியாவில் ரூ.69,499 க்கும் வாங்க கிடைக்கும்.
5. ஆப்பிள் ஐபோன் 16 (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.51,999 க்கும், அமேசான் இந்தியாவில் ரூ.69,499 க்கும் வாங்க கிடைக்கும்
6. ஆப்பிள் ஐபோன் 16இ (128 ஜிபி): பிளிப்கார்ட்டில் ரூ.54,900 க்கும், அமேசான் இந்தியாவில் ரூ.51,499 க்கும் வாங்க கிடைக்கும்.


