காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
ஹோட்டலில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு (Enteric Fever) தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வழங்கி உள்ளது அதன்படி, தமிழ்நாட்டில் உணவகங்கள் வைத்து நடத்தக்கூடிய உரிமையாளர்கள் முறையாக உணவு பாதுகாப்புத்துறை உரிமைத்தை வைத்திருக்க வேண்டும் அதை முறையாக புதுப்பிக்க வேண்டும், உணவகங்களில் உணவு சமைக்கும் போது அந்த ஒரு பொருட்களிலும் செயற்கை நிறமூட்டிகளை சேர்க்கக்கூடாது, உணவு பாதுகாப்புத் துறையின் விதியின் படி உணவுப் பொருட்களை சமைக்க வேண்டும், உணவகங்களில் உணவு சமைக்கக்கூடிய பணியாளர்கள் நோய் தொற்று பாதிப்பு மற்றும் காய்ச்சல் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும், ஹோட்டலில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் அனைவரும் உணவு சமைக்கும்போதும், உணவு பரிமாறும்போதும், கையுறை மற்றும் தலையுறை அணிந்து கொண்டு உணவுகளை தயாரிக்கவும் பரிமாறவும் வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது, அதேபோன்ற ஹோட்டல்களில் சமையல் அரங்கு, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், கழிவறை, உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த சில நாட்களாக உணவகங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு (Enteric Fever) தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள், உட்பட அனைவரும் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் கடையில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 செலுத்தி தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும், தடுப்பூசி போட்ட சான்றிதழை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதன் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


