திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை!!

 
drone camera

தமிழக முதல்வரும்,  திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் காலை  செல்கிறார்.

stalin

கருமண்டபம் பகுதியில் மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் முதல்வர் ஸ்டாலின் , மறுநாள் அரசு விழாவிலும் பங்கேற்கிறார்.  எனவே இரு நாட்களும் திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

MK Stalin

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்த போது , வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை சங்கமம் 2023  வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை புரிகிறார்.  எனவே ஜூலை 26,  27 ஆகிய தேதிகளில் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.