மக்களே குடை எடுத்துட்டு போங்க..! நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
Nov 21, 2025, 13:41 IST1763712696049
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக ந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது வரும் 24ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென்காசி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


