உணவு டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

 
ச் ச்

பட்ஜெட் அறிவிப்பின் படி 2 ஆயிரம் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க 20 ஆயிரம் மானியம் வழங்க 4 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நல வாரியத்தின் மூலம் 2 ஆயிரம் தொழிலாளர்கள் மின்சார இரு சக்கர வாகனம் வாங்க 20 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.  இதை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 4 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, நல வாரியத்தின் அனுமதி பெற்று விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.