திண்டுக்கல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்..!

 
1

திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை என புகார் அளித்ததன் பேரில் குஜராத்தில் உள்ள ஆய்வு மையத்திற்கு நெய்யை பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்த ஆய்வின் முடிவில் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்த 5 நிறுவனங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டைரி நிறுவனத்தை தடுப்பு பட்டியலில் வைத்து திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்தநிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீசில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறை விதிகளை மீறியதற்காக உங்கள் நிறுவனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.