24 வருடமாக பழைய எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழும் ஐயப்ப சாமி பக்தர்

 
ad

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் குமார்(40), தாய் தந்தையர் யார் என்ற தெரியாத நிலையில், திருமணமும் ஆகாமல் கடந்த 24  ஆண்டுகளாக பழைய வாகன எஞ்சின் ஆயிலை ஆகாரமாக கொண்டு உயிர் வாழ்வதாக தெரிவிக்கிறார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தாலுகா அலுவலக வளாகத்தில் கருநிறத்தில் எஞ்சின் ஆயிலை குடித்து வந்த குமார் என்பவரை பலரும் சூழ்ந்துக்கொண்டு ஆச்சரியமாக பார்த்தனர். இதுக்குறித்து குமார் இடம் விசாரித்ததில் கட்டிட தொழில் செய்து வந்தபோது கூலி கொடுக்காததால் பசிக்காக எஞ்சின் ஆயில் குடித்ததாகவும், அதனையே பழக்கப்படுத்திக்கொண்டதாக கூறினார்

கடந்த 24 ஆண்டுகளாக எஞ்சின் ஆயில், அவ்வபோது காகிதங்கள், டீ,காபி ஆகியவற்றை குடிப்பதாகவும், நாளொன்றிற்கு 5 லிட்டர் வரை வாகன பழுது பார்க்கும் நிலையங்களில் பணமின்றி பழைய எஞ்சின் ஆயில்களை வாங்கி குடிப்பதாகவும், இதனால் தனக்கு எவ்வித உடல் உபாதையும் இல்லை என்றார். ஐயப்பா சாமி பக்தி காரணமாக எப்பொழுதும் கருநிற ஆடைகள் அணிந்துக்கொள்வதாக கூறினார். கோவிலுக்கு சென்று திரும்பியபோது ரயில் டிக்கெட் இல்லாமல் ஒசூரில் இறக்கிவிட்டதாகவும் சித்ரதுர்கா செல்ல பணமில்லாமல் பலரிடம் கேட்டு ஊருக்கு செல்ல இருப்பதாக கூறினார். உணவாக பழைய எஞ்சின் ஆயிலை குடிக்கும் நபரை பலரும் ஆச்சரியமாக ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.