வரலாற்றில் முதல்முறை.. முட்டை விலை அதிரடி உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!
முட்டை விலை வரலாறு காணாத உச்சம் தொட்டிருப்பதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்து 100 கோழிப் பண்ணைகள் மூலம் நாள்தோறும் சுமார் ஆறு கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, வடமாநிலங்கள் உள்ளிட்ட உள்ளூர் சந்தைகள் மற்றும் சத்துணவு மையங்கள் என முட்டைகள் பிரித்து அனுப்பப்படுகின்றன.
முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினமும் நிர்ணயித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
நேற்று (நவ. 17) விலை ரூ.6 ஆக இருந்த நிலையில், இன்று 5 காசுகள் அதிகரித்து ரூ.6.05 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சாதாரண கடைகளில் முட்டை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வடமாநிலங்களில் முட்டை தேவை அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


