ஈபிஎஸ் மீது அதிருப்தி- செங்கோட்டையனை சமாதானம் செய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
Mar 17, 2025, 11:13 IST1742190236487
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உடன் சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

சபாநாயகரை பதவி நீக்கக்கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்த தீர்மானத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெறவுள்ள நிலையில் செங்கோட்டையனை சமாதானம் செய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அறையில் செங்கோட்டையனுடன் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.


