பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கள்!!

 
tn

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்தன. இருப்பினும் இக்கூட்டணியில் கடந்த சில நாட்களாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக,  கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு புறம்  அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வருகிறது. பாஜக  பாமக, தேமுதிக , தமாக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

tn

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கள் 14 பேர் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்; காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஒருவரும் பாஜகவில் இணைந்தார்.


இந்நிகழ்வின் போது  மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளார்.