முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை!

 
1

15 ஆண்டுகளாகத் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த கொளத்தூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.சுமார் 9,122 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பெற்ற இந்த வெற்றி, தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது தேர்தலில் தோல்வியடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த வி.எஸ். பாபு ? 

75 வயதான வி.எஸ். பாபு, வட சென்னை அரசியலில் நன்கு அறியப்பட்ட ஒரு மூத்த முகம். 2006 முதல் 2011 வரை புரசைவாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பல ஆண்டுகள் திமுகவில் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பதால், கொளத்தூர் தொகுதியின் ஒவ்வொரு வீதியும், ஒவ்வொரு வாக்காளரின் மனநிலையும் இவருக்கு அத்துப்படி என்று சொல்லப்படுகிறது.2011-ல் ஸ்டாலின் கொளத்தூரில் முதல்முறை நின்றபோது, அவருக்குப் பின்னால் இருந்து வெற்றியைத் தேடித்தந்த அதே வி.எஸ். பாபு, இன்று விஜய்யின் தவெக சார்பில் களமிறங்கி ஸ்டாலினையே வீழ்த்தியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் ஒரே நாளில் "ஜெயண்ட் கில்லர்" என்று புகழப்பட்ட வி.எஸ். பாபுவுக்கு, முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில் நிச்சயம் ஒரு 'வெயிட்டான' இடம் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், முதல் பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. இன்று நடந்த அமைச்சரவை விரிவாக்கத்திலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் வி.எஸ். பாபு தற்போது கடும் அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.