தமிழ் பெருங்குடி மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..

 
ops

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சித்திரை முதல் நாளில் உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும்  இனிய “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்ற இனிய நன்னாளாம் சித்திரை முதல் நாளில் உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது இனிய “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி, நாகரிகத்தை உலகிற்கு தந்து, வணிகம் மூலம் வரலாறு படைத்த தமிழ் மக்கள், பருவங்களின் சுழற்சியினை ஆய்ந்து, அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். ‘சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்ற மக்களின் விருப்பத்தினை உறுதி செய்த பெருமை  இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும் என்பதை இந்த நன்னாளில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ் பெருங்குடி மக்களுக்கு புத்தாண்டு  வாழ்த்து - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் முத்திரைப் பதிக்கும் முத்தான சிந்தனைகள், உருவாகட்டும், உத்வேகம் பிறக்கட்டும் என்று வாழ்த்துவதோடு, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழ்நாட்டை படைத்திட உறுதியேற்போம். இந்த புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், நிறைவான மகிழ்ச்சியையும், புதிய எழுச்சியையும் அளிக்கும் ஆண்டாக விளங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளைத் உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.