#BREAKING திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க செல்வம் காலமானார்..!

 
tn

உடல் நலக்குறைவு காரணமாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் காலமானார்.

rn
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தார் கு.க.செல்வம். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தலில் அந்த தொகுதிமருத்துவர் எழிலனுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதிருப்தி காரணமாக  கு.க.செல்வம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில்  இணைந்தார். பின்னர் பாஜக வேட்பாளராக களமிறங்கிய குஷ்பூக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணியாற்றினார். ஆனாலும் பாஜக அத்தொகுதியில் தோல்வியடைந்ததுடன், திமுக மோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம். அவருக்கு திமுகவில் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

thn

இந்நிலையில் உடல்நலக்குறைவால் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க.செல்வம்  சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.