அதிமுகவில் இருந்து விலகிவிடுவேன் என கூறினேனா? - ஜெயக்குமார் விளக்கம்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகிவிடுவேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக செய்திகள் பரவிய நிலையில், அதனை ஜெயக்குமார் மறுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது போல போலி செய்தி ஒன்று பரவி வந்தது. அந்த செய்தியில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது. ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன்
பத்திரிகையாளர் கேள்விக்கு ஜெயக்குமார் பதில், என அந்த போலி செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த போலி செய்தியை மறுத்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த போலி செய்தியை தனது எக்ஸ் வலைதள் பக்கத்தில் பதிவிட்டு, தவறான மற்றும் போலியான தகவல் என குறிப்பிட்டுள்ளார்.


