தந்தை பெரியார் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை!

 
jayakumar jayakumar

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50-ஆவது நினைவு நாளை முன்னிட்டு இன்று (24.12.2023 - ஞாயிற்று கிழமை), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை, அண்ணாசாலை, சிம்சன் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். 


இந்த நிகழ்ச்சியில் கழக மாணவர் அணிச் செயலாளர் திரு. S.R. விஜயகுமார், Ex. M.P., கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் டாக்டர் J. ஜெயவர்தன், Ex. M.P., உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் மரியாதை செலுத்தினர்.