நான் ஒன்றும் கிறுக்கன் அல்ல, தொலைத்துவிடுவேன் - ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு!

 
rajendra balaji rajendra balaji

எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,   கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒன்றும் கிறுக்கன், பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன்.

என்னைப் பற்றி பேச வேண்டுமானால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறாய்? எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சால் அதிமுகவில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.