எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி
எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎஸ் தலைமையிலான அதிமுக தொடர்ந்து 11 வது தோள்விகளை சந்தித்து வரும் நிலையில், அவரை பதவிவிலக்கக்கோரி முன்னாள் அமைச்சர்கள், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று காலை 9 மணிக்கு கூடும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
நேற்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பல மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டனர். ஸ்டாலின் ஆட்சியில் இபிஎஸ் அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக இருந்த நிலையில், தற்போது எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகவும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

