வெளிநாடு தப்ப முயன்ற முன்னாள் அமைச்சர் மகன் கைது
Jun 17, 2025, 18:23 IST1750164837886
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனும், தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருமான ராஜா கைது செய்யப்பட்டார்.

சகோதரியிடம் ரூ.17 கோடியிலான சொத்துக்களை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகனும், தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலருமான ராஜா மீது புகார் எழுந்தது. தனது ரூ.17 கோடியிலான 2 ஏக்கர் நிலம், 300 சவரன் நகையை அடமானம் வைத்து மோசடி செய்ததாக ராஜா மீது அவரது சகோதரி பொன்னரசி புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற ராஜாவை சென்னை விமான நிலையத்தில் சுற்றிவளைத்து கைது செய்தனர். ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜாவின் மனைவி அனுஷாவை போலீசார் தேடிவருகின்றனர்.


