#BREAKING முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை!

 
tn

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் போது பெண் எஸ்.பி.க்கு காரில் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் , சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. 

tn

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் 80க்கும் மேற்பட்டோரரிடம் விசாரணை நடத்தினர்.  அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியும் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.  இதை தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தனர்.  கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் நடைபெற்று வந்த நிலையில்,  இன்று வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

tn

 அதில் பெண் எஸ்.பி. க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் மூன்றாண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அவருக்கு உடனடியாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.