தமிழக அரசு அதிரடி : முன்னாள் தலைமை செயலர் எம்.முருகானந்தம் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ..!

 
tn govt

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

என்.முருகானந்தம் ஐஏஎஸ் - தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான என்.முருகானந்தம், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆணையராகவும், கூடுதல் தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பதவியை பி.அமுதா ஐஏஎஸ் விகித்து வந்தார்.

எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பதவில் இருந்த எம்.ஏ.சித்திக், அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த பதவியை டி.உதயச்சந்திரன் வகித்து வந்தார்.

டாக்டர் எஸ்.ஸ்வர்ணா ஐஏஎஸ் - மாநில திட்ட இயக்குநர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு அரசின் சுற்றுலா, பண்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த பதவியை டாக்டர் கே.மணிவாசன் வகித்து வந்தார்.

கே.நந்தகுமார் ஐஏஎஸ் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதவியில் இருந்த கே.நந்தகுமார், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த பதவியை டி.கிறிஸ்துராஜ் வகித்து வந்தார்.

இதேபோன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பதவியில் இருந்த டாக்டர் அண்ணாதுரை, முதலமைச்சரின் செயலாளர்-III ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கூடுதல் செயலாளராக இருந்த விஷ்ணு ஐஏஎஸ், முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.