முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி..!
Dec 8, 2025, 14:19 IST1765183761049
மதுரை சிவரக்கோட்டையில் கோவிலுக்குச் சொந்தமான 4 சென்ட் நிலத்தை அபகரித்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அழகிரி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மு.க. அழகிரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மு.க. அழகிரியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், விசாரணைக் கோர்ட்டில் உள்ள வழக்கை ஏன் எதிர்கொள்ளக் கூடாது என்றும் அழகிரி தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


