கோவை முன்னாள் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தற்கொலை - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

 
stalin

கோவை முன்னாள் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மரணத்தையடுத்து முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

கோவை முன்னாள் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் தற்கொலை குடும்பப் பிரச்னை காரணமாக காளப்பட்டியில் உள்ள வீட்டில் பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். 

stalin

இந்நிலையில்  கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மரணமடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். கவுண்டம்பாளையம் பகுதியில் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் ஆற்றிய மக்கள் சேவை மகத்தானது. ஆர்.கிருஷ்ணனின் தொண்டு கவுண்டம்பாளையம் மக்களால் மட்டுமின்றி, திமுகவினராலும் என்றென்றும் மறக்க முடியாதது. பையா என்ற கிருஷ்ணனை இழந்து வாடும் குடும்பத்தினர், திமுக உடன்பிறப்புகளுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.