ஃபார்முலா 4 கார் ரேஸ் : தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கின..

 
ஃபார்முலா 4 கார் ரேஸ் : தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கின.. 

சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் ரேஸின் 2வது நாள்  பந்தயத்தின் தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

ஃபார்முலா 4 கார் ரேஸ் : தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கின.. 

 சென்னையில்  ஃபார்முலா 4 வகை இரவு நேர கார் பந்தயம் நேற்று உற்சாகமாக தொடங்கியது. ஃபார்முலா ஃபார் கார்பந்தயத்தின் தகுதிச்சுற்று மற்றும் பிரதான போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.  காலை 11:45 மணி முதல் நண்பகல் 12:02 மணி வரை JK FLGB F4 பந்தயத்துக்கான தகுதிச்சுற்றுகள் நடைபெறுகின்றன. மதியம் 1:20 மணிக்கு 8 சுற்றுகள் கொண்ட JK FLGB F4 பிரதான போட்டி நடைபெறுகிறது. இந்தியன் ரேசிங் லீக் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் நண்பகல் 12:15 மணி முதல் 12 :25 மணி வரை நடைபெறுகிறது. இந்தியன் ரேசிங் லீக் போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்று மதியம் 2 மணி முதல் 2:10 மணி வரை நடைபெறுகிறது. 

Image

இந்தியன் ரேசிங் லீக் பிரதான போட்டி-2  இரவு 09:45 மணி முதல் 10:15 மணி வரை நடைபெறும். ஃபார்முலா போர் சாம்பியன்ஷிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் மதியம் 12:35 மணி முதல் 12:45 மணி வரை நடைபெறுகிறது. ஃபார்முலா போர் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றில் மதியம் 12:50 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. ஃபார்முலா போர் சாம்பியன்ஷிப் பிரதான போட்டி மதியம் 03:30 மணி முதல் 4 மணி வரையும்,  இரவு 08:45 முதல் 9:15 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.