14 திருக்கோயில்களில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!!

 
tn

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 திருக்கோயில்களில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 15 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதுக்கோட்டை தேவஸ்தானத் திருக்கோயில்களின் நிர்வாகம் (ம) பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியமாக ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 8.3.2024 அன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 14 திருக்கோயில்களில் ரூ.131.15 கோடி மதிப்பீட்டிலான திருமண மண்டபங்கள், சுற்றுப்பிரகார மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு, வகுப்பறைகள் மற்றும் நூலகம், இளைப்பாறும் மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பெருந்திட்ட வளாகப் பணிகள் போன்ற 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 15 திருக்கோயில்களில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விருந்து மண்டபம், காதுகுத்து மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், பணியாளர் குடியிருப்பு, திருமண மண்டபம், சஷ்டி மண்டபம், வாகன நிறுத்துமிடம், சேவார்த்திகள் தங்கும் விடுதி, கல்லூரி ஆராய்ச்சிக் கூடம், அர்ச்சகர் குடியிருப்பு, அன்னதான கூடம், வைணவ பிரபந்த பாடசாலை, வணிக வளாகம், பள்ளி அலுவலகம் மற்றும் நூலகம் போன்ற 17 பணிகளை திறந்து வைத்தார்.

14 திருக்கோயில்களில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணிகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 33.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு, பேருந்து நிலைய அபிவிருத்தி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்கள் ஓய்வு மண்டபம் கட்டும் பணிகள்; திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் நூலகம் கட்டும் பணிகள் மற்றும் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 3.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி; ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 6.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுப்பிரகார மண்டபம் கட்டும் பணி; கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் 5.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி; திருவாரூர் மாவட்டம், மாப்பிள்ளைக்குப்பம், அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயிலில் 4.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி;

stalin

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம், அருள்மிகு போர்மன்னலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி; தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் 3.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி மற்றும் சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; கடலூர் மாவட்டம், திருபாதிரிபுலியூரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி; காஞ்சிபுரத்தில் 2.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி;
தர்மபுரி மாவட்டம், தர்மபுரியில், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி மற்றும் குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; தேனி மாவட்டம், தேனியில், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி, அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுப்பிரகார மண்டபம் கட்டும் பணி; சென்னை மாவட்டம், மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; என மொத்தம் 131.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.