உயர்கல்வித் துறை சார்பில் ரூ.134.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்கள் திறப்பு

 
tn

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.134.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.86.89 கோடி செலவில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  27.02.2024 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 134 கோடியே 15 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆய்வகக் கட்டடங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டடங்கள், வகுப்பறைகள், பணிமனைகள், சிற்றுண்டிக் கட்டடம், கணினி அறிவியல் கட்டடம், கழிவறை தொகுதிகள் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 86 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கல்விசார் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

tn
உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தல்


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஆய்வகக் கட்டடங்கள்; வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு திருமகள் ஆலைக்கல்லூரியில் 5 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 13 ஆய்வக கட்டடங்கள்; ஈரோடு மாவட்டம், தாளவாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 12 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம்; கரூர் மாவட்டம், குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஆய்வகக் கட்டடங்கள்; என மொத்தம் 134 கோடியே 15 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்


உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்படவுள்ள புதிய கல்விசார் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்

stalin
கடலூர் மாவட்டம், வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 13 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய கட்டடம்; கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 15 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய கட்டடம்;ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, ஜம்புகுளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 11 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய கட்டடம்; அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பெரியவளையம் கிராமம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 15 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய கட்டடம்;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள தேர்வு கூடம்; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 4 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஆறு வகுப்பறைகள், மூன்று ஆய்வகங்கள் மற்றும் மூன்று கழிவறைத் தொகுதிகள்;

மதுரை மாவட்டம், ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்; தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை தொகுதிகள்;
தூத்துக்குடி, அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 2 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகக் கட்டடம்; தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் 3 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 14 வகுப்பறைகள்;

பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 14 வகுப்பறை கட்டடம்; வேலூர் மாவட்டம், குடியாத்தம் திருமகள் ஆலை அரசுக் கல்லூரியில் 5 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; என மொத்தம் 86.89 கோடி செலவில் கட்டப்படவுள்ள கல்விசார் கட்டடங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.