மணல் குவாரி உரிமம் வாங்கி தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் மோசடி

 
செல்லூர் ராஜூ

மணல் குவாரி உரிமம் வாங்கி தருவதாக செல்லூர் ராஜு பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள டி. நல்லா குளம் கிராமத்தை சேர்ந்த சரவணன் அந்த பகுதியில் கிரஷர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் மதுரை நேரு நகரை சேர்ந்த சங்கரி என்பவர் கடந்த 2020 ஆம்ஆண்டு அறிமுகம் ஆகிறார். பேஸ்புக்கில்  சங்கரி செல்லூர் ராஜு உள்ளிட்ட  அரசியல்வாதிகளுடன் இருக்கும் படத்தை பார்த்து  அது குறித்து அவர் விசாரித்த பொழுது தனக்கு செல்லூர் ராஜு அவருடைய மனைவி மிகுந்த நெருக்கம் என சங்கரி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு தனக்கு மணல் குவாரி எடுத்து தருமாறு சரவணன் கேட்டிருக்கிறார்.அவரை மதுரை வரவழைத்த சங்கரி பிருந்தா, செல்வம், மகா, மாரி, மாயதேவன் உள்ளிட்டவர்கள் அறிமுக செய்துள்ளார். அவர்கள் செல்லூர் ராஜு  வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு அவர் வெளியில் சென்று விட்டதாக  கூறி அவரிடம் முதல் தவணையாக 25 லட்ச ரூபாய் பெற்றுள்ளனர் ஆனால் மணல் குவாரிக்கான உரிமை பெற்று தராமல் தொடர்ந்து இழுத்தடித்து இருக்கின்றனர். மணல் குவாரி உரிமம் குறித்து சங்கரியிடம் சரவணன் கேட்டா போது பிருந்தாவை  என்பவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் அவருடைய தொலைபேசி எண்ணில் இறுதியாக நீங்கள் தான் பேசி இருக்கிறீர்கள் எனவே போலீசார் உங்களை சந்தேகப்படுகிறார்கள் எனக் கூறி அதை  பயன்படுத்தி தொடர்ந்து பல்வேறு தவணைகளாக 6 கோடி 80 லட்சம் வரை பணத்தை பெற்றுள்ளனர்.

செல்லூர் ராஜு

பணத்தை திருப்ப  சரவணன் கேட்ட பொழுது பணம் தராமல் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இதனை அடுத்து சங்கரி, மாயத்தேவன், மகா, செல்வம் உள்ளிட்ட ஐந்து பேர் மீது மத்திய குற்றப்பிரிவு பிரிவில் சரவணன் புகார் அளித்துள்ளார். இதில் மாயத்தேவன் மதுரை அகிம்சாபுரம் பகுதியில் கவுன்சிலராக உள்ளார் சங்கரி, மாயத்தேவன் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.