இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் எனக்கூறி மாற்றுத்திறனாளி மோசடி..

 
இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் எனக்கூறி மாற்றுத்திறனாளி மோசடி..

இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என ஏமாற்றிய மாற்றுத் திறனாளி வினோத் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி  வினோத் பாபு.  இவர்  இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி ஏமாற்றி வந்துள்ளார். அத்துடன் கடையில் வாங்கிய கோப்பையைக் காட்டி,  போட்டியில் வென்றதாகக்  கூறி ராமநாதபுரம் ஆட்சியர், அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  என முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி   உலகக்கோப்பை கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் செல்ல உள்ளதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் எனக்கூறி மாற்றுத்திறனாளி மோசடி..

மேலும்,  லண்டனில் மார்ச் 26ம் தேதி தனது அணி பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றதாகவும் வினோத் பாபு கூறியிருக்கிறார். இந்த நிலையில், வினோத் பாபுவால் ஏமாற்றப்பட்ட பலர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும்  மாவட்ட எஸ்.பி,யிடம் புகார் அளித்தனர்.  அதன்படி பேக்கரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பெற்று ஏமாற்றிய புகாரில் ராமநாதபுரம் குற்றவியல் போலீஸார் வினோத் பாபு மீது 406, 420 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.