மக்களே ரெடியா? நாளை முதல் 3 நாட்களுக்கு டபுள் டக்கர் பேருந்தில் இலவச பயணம்!

 
ச் ச்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் இலவசமாக  டபுள் டக்கர் பேருந்தில் பயணிக்கும் வகையில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையின் அடையாளங்களின் ஒன்றான டபுள் டக்கர் பேருந்து வசதியை சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 18 ஆண்டுகள் கழித்து பயன்பாட்டிற்கு வந்துள்ள டபுள் டக்கர் பேருந்து பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஒரு சிறிய இலவச பயணத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2026-யை சுற்றிப் பார்க்க வந்த குழந்தைகள் மற்றும் பெண்களை இலவசமாக சென்னை நேப்பியார் பாலம் வழியாக சிவானந்த சாலையிலிருந்து மீண்டும் தீபத்துடன் வரை டபுள் டக்கர் பேருந்தில் இலவசமாக பயணித்தனர். மேலும் முதல் முறையாக இந்த பேருந்தில் சென்றது மகிழ்ச்சியாகவும், புது அனுபவத்தையும் தந்ததாக குழந்தைகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் , பொங்கல் விடுமுறையாக வெள்ளி , சனி மற்றும் ஞாயிறு தினங்களில்  இந்த டபிள் டக்கர் பேருந்தில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர். டபுள் டக்கர் பேருந்தில் முதல் முறையாக பயணித்த சிறுமி தனது அனுபவங்களை தந்தைக்கு வீடியோ கால் செய்து மகிழ்ச்சியுடன் பரிமாறினார்.