லாட்ஜில் ரூம் போட்டு மது அருந்திய தோழிகள்.. ஆண் நண்பரை வரவழைத்த தோழி.. வேலூரை சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..
வேலூரைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தோழியின் ஆண் நன்பரும், தோழியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கிய தோழிகள் எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள ஒரு லாட்ஜில் 2 ரூம்களை புக் செய்துவிட்டு, அங்கு வேலூரைச் சேர்ந்த தோழியையும் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த அறைக்குச் சென்ற தோழிகள் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் அங்கு வரவழைத்துள்ளார். பிறகு 4 பேரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். மதுபோதை தலைக்கேறிய நிலையில் நால்வரும் இருந்துள்ளனர். இதில் வேலூரைச் சேர்ந்த பெண் மட்டும் ஒரு மணிநேரம் கழித்து அருகில் இருந்த அறைக்குச் சென்று தூங்கியுள்ளார். சில மணி நேரங்கள் கழித்து கண்விழித்து பார்த்தபோது தன் அலங்கோலமான நிலையில் இருந்தததோடு, அருகில் தோழியின் ஆண் நண்பர் தூங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை உணர்ந்த பெண், பிறகு தோழியிடமும் ஆண் நண்பரிடமும் சண்டை போட்டுவிட்டு வேலூருக்கு சென்று விட்டார். அங்கு தனது தாயிடம் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார். அவர் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த இடம் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கை ட்ரான்ஸ்ஃபர் செய்தனர். இந்த நிலையில் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண்ணையும், அரசுத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவது நண்பரைகள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


