இன்று முதல் 1 ரூபாயில் மெட்ரோ, பேருந்து, ரயிலில் போகலாம்..!

 
1 1

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சாலை மார்க்கம் மட்டுமின்றி மெட்ரோ, மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் பேருந்துகள் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து ஒரே செயலியில் டிக்கெட் எடுக்கும் விதமாக சென்னை ஒன் என்ற செயலியை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த செயலி சென்னைவாசிகள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வரும் நிலையில், இந்த செயலி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


அதாவது, சென்னை ஒன் செயலி மூலமாக சிறப்பு சலுகை கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இன்று முதல் சென்னை செயலியை பயன்படுத்தி வெறும் ஒரு ரூபாயில் மாநகர பேருந்து, மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களில் பயணிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இந்த சலுகை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை யுபிஐ மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.

இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த நடைமுறை பயணிகளுக்கு மிகவும் பயன் தருவதாக அமைந்துள்ளது.

இந்த சென்னை ஒன் செயலியை மெட்ரோ, பேருந்து, மின்சார ரயில்கள் மட்டுமின்றி ஆட்டோ, டாக்சிகளுக்கும் பயன்படுத்தலாம்.  ஆனால், ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு இந்த சலுகையை அளிக்கவில்லை.