நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!!

 
stalin stalin

திருநெல்வேலி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின்  நிதியுதவி அறிவித்துள்ளார்.

stalin

இதுக்குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழத்திருவேங்கடநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.பாண்டி என்பவரது வீட்டிற்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த திரு.ஸ்ரீராம், த/பெ.பாலகிருஷ்ணன் (வயது 25) மற்றும் திரு.அருண்குமார், த/பெ.ஆறுமுகம் (வயது 23) ஆகியோர் நண்பர்களுடன் நேற்று (8.5.2023) மதியம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

death

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.